Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோவாக நடிக்கும் விநாயகராஜ்

சென்னை: அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான ‘லாக் டவுன்’ என்ற படத்தில், டாக்டர் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர் விநாயகராஜ். ‘திருப்பதி’, ‘ஆஞ்சநேயா’, ‘சிகரம் தொடு’, ‘புலி வருது’, ‘மாமனிதன்’, ‘திருவின் குரல்’, ‘பீட்சா 3’, ‘லைன்மேன்’ ஆகிய படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்த அவர், ‘லாக் டவுன்’ படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உயிரிலே கலந்தது’ என்ற படத்தின் டைரக்டர் கே.ஆர்.ஜெயா இயக்கும் புதிய படத்தில், கதையின் நாயகனாக விநாயகராஜ் நடிக்கிறார். இதுகுறித்த இதர தகவல்கள் விரைவில் வெளியாகிறது.