Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோயின்களுக்கு மாத செலவு மட்டும் ரூ.5,00,000: நிதி அகர்வால் தகவல்

சென்னை: அழகு பராமரிப்புக்காக மட்டும் ஹீரோயின்களுக்கு மாதம் ரூ.5 லட்சம் செலவாகிறது என நடிகை நிதி அகர்வால் கூறினார். நிதி அகர்வால் அளித்த பேட்டியில் அவர் மாத செலவு மட்டும் 5 லட்சம் ரூபாய் ஆவதாக கூறி இருக்கிறார். ட்ராவல், தங்குவது, டயட், ஜிம், ட்ரெயினர், பார்லர் செலவுகள் என மொத்தம் 5 லட்சம் ரூபாய் வரை செலவு ஆவதாக கூறி இருக்கிறார்.

‘‘ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் மேக்கப், உடை, ஹேர் ஸ்டைலிங், போட்டோஸ் என மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். அதை சில நேரங்களில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்கள் கொடுத்தாலும், சில நேரங்களில் நானே கொடுக்க வேண்டி இருக்கும். இந்த செலவெல்லாம் எனக்கு மட்டும் கிடையாது. என்னைப் போல மற்ற ஹீரோயின்களுக்கும்தான். பெரிய ஹீரோயின்கள் இதைவிட அதிகமாக செலவிடுகிறார்கள்’’ என நிதி அகர்வால் கூறி இருக்கிறார்.