Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோயினுடன் நெருங்கி நடிக்கும்போது மனைவிக்கு பிரச்னை: யஷ் ஒப்புதல்

பெங்களூரு: நடிகையுடன் நெருக்கமான காட்சிகளை பார்க்கும்போது, மனைவி எப்படி எடுத்துக்கொள்வார் என்பது குறித்து கேள்விக்கு நடிகர் யஷ் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “படங்களில் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது எனக்கும் அசௌகரியமாக தான் இருக்கும். அப்படியான காட்சிகளில் நடிப்பது எளிதானதல்ல. கதைக்கு அந்த காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியாகிறது.

நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை பார்க்கும்போது என் மனைவிக்கு நிச்சயம் சங்கடமாக தான் இருக்கும். அதற்காக அவர் அதை தவறாக புரிந்துகொள்வார் என்று சொல்ல முடியாது. அவர் என்னை மிகவும் நம்புகிறார். எல்லாவற்றையும் தாண்டி, அவரும் ஒரு நடிகை என்பதால், இதனை அவர் புரிந்துகொள்வார். படத்தில் வேலை செய்வது ஒரு நடிகன்.

அவர் கணவர் இல்லை என்பது அவருக்கு நன்றாகவே புரியும்” என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் யஷ் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் சில காட்சிகளில் கியாரா அத்வானியுடன் யஷ் நெருக்கமாக, விரசமான காட்சிகளில் நடித்திருக்கிறார் என புகார் எழுந்துள்ளது. இதையொட்டி இந்த பதிலை கூறியிருக்கிறார் யஷ்.