Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹாய் விமர்சனம்...

காதலித்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் கவின், தனக்காக பெண் கிடைக்காத நிலையில் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். தந்தை பிரபு, தனக்கு பிடிக்காத மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்துவிடுவாரோ என்று பயந்து, சென்னைக்கு ஓடி வருகிறார் நயன்தாரா. ஒருகட்டத்தில் கவின், நயன்தாரா இருவரும் சந்தித்து நட்பு வளர்க்கின்றனர். அதன் பிறகு நடப்பவைதான் படத்தின் திரைக்கதை.

கவினுக்கு இந்த கேரக்டர் ‘டெய்லர்மேட்’ மாதிரி பொருந்தியுள்ளது. அவருக்கும், நயன்தாராவுக்குமான லவ் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. தேவயானியாக வரும் நயன்தாரா, மற்ற படங்களை விட இதில் காதலிலும், சென்டிமெண்ட்டிலும் நடித்து அசத்தியுள்ளார். கவின் தந்தையாக சிறப்பாக நடித்திருக்கும் மறைந்த கே.பாக்யராஜ், தனது இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது என்று நிரூபித்துள்ளார்.

மகள் கர்ப்பம் அடைந்ததை அறிந்து, அவருக்கு பிடித்த தின்பண்டங்களை கொண்டு வரும் பிரபு, கண்கலங்க வைக்கிறார். சுஹாசினி, ராதிகா, பெப்சி விஜயன், விடிவி கணேஷ், ஆதித்யா கதிர், அம்ருதா சீனிவாசன், ரெஞ்சி பணிக்கர், சத்யன், குரேஷி, காவ்யா அறிவுமணி, மிர்ச்சி கெமி, பாலாஹசன் ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே. ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். பிலோமின் ராஜின் எடிட்டிங் நேர்த்தி. ஃபேமிலி டிராமா கதையில் குழந்தை சென்டிமெண்ட்டை கலந்து படத்தை கலகலப்பாக நகர்த்தியுள்ள இயக்குனர் விஷ்ணு எடவன், லாஜிக் பற்றி கவலைப்படவில்லை. அழுத்தமாக சொல்ல வேண்டியதை எல்லாம் லைட்டாக சொல்லியிருப்பது நெருடுகிறது.