சென்னை: கடந்த 2023ல் அறிவியல் கதை அம்சத்துடன் வெளியான ‘3.6.9’ என்ற படத்தை இயக்கிய ஷிவ் மாதவ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி என ஒவ்வொரு மொழியில் இருந்தும் பெரிய நடிகர்களை வைத்து, ஒரு பிரமாண்டமான கமர்ஷியல், அறிவியல், ஃபேண்டசி கலந்த சூப்பர் ஹீரோ படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
படம் குறித்து இயக்குனர் ஷிவ் மாதவ் கூறுகையில், ‘விஞ்ஞான பின்னணியில் ஹாலிவுட் ஸ்டைலில் அதிக செட் அமைத்து சிஜி காட்சிகள் இல்லாமல் இப்படத்தை எடுக்கிறேன். ஹாலிவுட்டுக்கு நிகரான பல விஷயங்களை படத்தின் மேக்கிங்கில் செய்ய நினைக்கிறேன். அக்டோபர் மாதம் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்குகிறது.
என் முதல் படத்தில் மறைந்த இயக்குனர் கே.பாக்யராஜ் சார் நடித்திருந்தார். இந்த படத்திலும் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். நான் சோர்ந்துபோன நேரங்களில் என்னிடம். ‘ஷிவா, உன்கிட்ட ஒரு பெரிய பொட்டன்ஷியல் இருக்கு. நம்பிக்கையோட ஓடு, உன்னால முடியும்’ என்று கே.பாக்யராஜ் சொல்லி எனக்கு உந்து சக்தி கொடுத்தார்’ என்றார்.
