Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹனிரோஸ் இடுப்பை பிடித்து வாலிபர் சில்மிஷம்: விழாவில் ரசிகர்கள் அத்துமீறல்

சென்னை: நகைக் கடை திறப்பு விழாவின்போது நடிகை ஹனிரோஸ் இடுப்பை பிடித்து வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்தார். அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அத்துமீறியும் நடந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் சிங்கம் புலி, கந்தர்வன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேரளா கோழிக்கோட்டில் நகைக் கடை திறப்பு விழாவுக்காக ஹனிரோஸ் சென்றிருந்தார்.

அப்போது கடையை திறந்துவிட்டு, வெளியே போட்டிருந்த மேடையில் ஏறி ஹனிரோஸ் பேசிக்கொண்டிருந்தார். அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். சிலர் பாதுகாவலர்களை மீறி மேடையில் ஏறினர். அப்போது ஒரு வாலிபர் ஹனிரோஸின் இடுப்பில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

உடனே தனது பேச்சை பாதியில் முடித்துக்கொண்டு ஹனிரோஸ் அந்த இடத்திலிருந்து வேகமாக சென்றார். அப்போது அவர் கூட்டத்தில் சிக்கினார். அங்கிருந்த ரசிகர்கள் சிலர், அவரிடம் அத்துமீறி நடந்துகொள்ள ஹனிரோஸ் எரிச்சல் அடைந்தார். தனது பாதுகாவலர்களை சத்தம்போட்டு அழைத்தார். உடனே அங்கு வந்த பாதுகாப்பு நபர்கள் கூட்டத்திலிருந்து ஹனிரோஸை மீட்டு பத்திரமாக காரில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.