சென்னை: குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய், பிபின் நடித்துள்ள படம், ‘பாரிஸ் கஃபே’. தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன், எல்.வி எண்டர்டெயின்மெண்ட் வெங்கல் எம்.லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ளார். கே இசை அமைக்க, சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் குரு சோமசுந்தரம் பேசும்போது, ‘வேறொரு நடிகை மிகவும் அழகாக இருக்கிறார் என்று நான் சொன்னதும் ஹீரோயின் அனுமோல் கோபப்பட்டார். இது எங்களுக்குள் நடக்கும் அன்பான சண்டை. இந்த படத்தின் விழாவில் கவுசல்யா சங்கர் கலந்துகொண்டது சிறப்பு. பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பாக வளராது. அவருக்கு நடந்தது போன்ற ஒரு சம்பவம், இனி இன்னொருவருக்கு இங்கே நடக்கக்கூடாது. நாம் மாறினால்தான் எல்லாமே மாறும். இந்த படம் ஆணவக்கொலை பற்றி பேசுகிறது’ என்றார். சராஜ் சீலன் பேசுகையில், ‘குரு சோமசுந்தரம் நடிக்க ஒப்புக்கொண்டதை பெருமையாக நினைக்கிறேன்’ என்றார்.
+
