Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நம்பிக்கை இருந்தால் நல்லது நடக்கும்: சூர்யா பேச்சு

சென்னை: ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் “கருப்பு”. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா, நட்டி சுப்பிரமணியம், இந்திரன்ஸ், ஷிவதா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் மே 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் கருப்பு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் சூர்யா, “இந்த படத்துல நான் ஹீரோ இல்லை. கருப்புசாமி தான் ஹீரோ. படம் பார்த்தவங்க முதல் பாதி எமோஷனலாகவும், இரண்டாம் பாதி தியேட்டர் மொமண்ட்ஸாகவும் இருப்பதாக சொல்றாங்க. நானும் அப்படித்தான் இருக்கும்ன்னு நம்புறேன். மே 14ம் தேதி கருப்பு ரிலீஸாகுது. படத்தோட ரிசல்ட் உங்க கையில தான் இருக்குது. நிச்சயமா உங்களுக்கு கருப்பு படம் பிடிக்கும். தியேட்டரில் பார்ப்போம்.

அருள் ஒரு மனிதனுக்குள் வரும்போது ஏற்படும் எஃபெக்டை நிஜமாவே பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கற இடத்துல நல்லது கண்டிப்பா நடக்கும். கருப்பு படம் இவ்வளவு தூரம் வந்ததற்கு கடவுள் கருப்பசாமி தான் காரணம் என நினைக்கிறேன். படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி பல திறமைகளை கொண்டவர்’’ என்றார்.