Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓட்டல் அறையில் உல்லாசம்; நடிகை மாதுரியுடன் இருந்த நடிகர் ஈஸ்வர் சாய் மனைவியிடம் சிக்கினார்: வீடியோ வைரல்

ஐதராபாத்: ‘பசிங்கா பாலலு’ என்ற பிரபலமான தெலுங்கு பாடலின் மூலம் தெலுங்கு மாநிலங்களில் அதிகம் அறியப்பட்டவர் நடிகர் ஈஸ்வர் சாய். நாட்டுப்புற பாடல்களை ஆல்பமாக எடுத்து பிரபலமான ஈஸ்வர் சாய், சினிமாவிலும் சின்னத்திரையிலும் பிரபலமானார். ஈஸ்வர் சாய், ஏற்கனவே திருமணமானவர் மற்றும் அவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்த நிலையில் தான் பிரபல நடிகையுடன் ஒரே அறையில் இருந்த ஈஸ்வர் சாய் கையும் களவுமாக மனைவியிடம் சிக்கியிருக்கிறார். நேற்று, ஒரு ஓட்டல் அறையில் இவரும் நடிகை மாதுரி ரத்தோடும் இருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற நடிகர் ஈஸ்வர் சாயின் மனைவி, அவர்களை பிடித்திருக்கிறார். இருவரும் அறையில் அரைகுறை ஆடையுடன் பிடிபட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர், ஈஸ்வர் சாயின் மனைவி ஊடகங்களிடம் பேசுகையில், ‘தனது கணவர் மிகவும் நல்லவர் என்றும், அவர் போதைப்பொருள் கூட பயன்படுத்தியதில்லை’ என்றும் கூறினார். நடிகை மாதுரி ரத்தோட் வேண்டுமென்றே தன் கணவரை அடிபணிய வைத்ததாக கண்ணீர் சிந்திய அவர், தங்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், அந்த நடிகை தங்கள் திருமண வாழ்வில் நுழைந்து குடும்பத்தை அழித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில், இந்த நடிகை வேறொருவருடன் காதல் பிரிவில் இருந்துபோது, ​​தான் மட்டுமே அவருக்கு ஆறுதல் கூறி ஆதரவளித்ததாகவும், கடைசியில் அவரே இப்படித் தனது முதுகில் குத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் நடிகர் ஈஸ்வர் சாயின் மனைவி வேதனை தெரிவித்தார்.

மாதுரி ரத்தோட், ஈஸ்வர் சாயின் ஆல்பங்களில் அவருடன் ஒன்றாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர், தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமாக அறியப்பட்டவர். அவரும் ஈஸ்வர் சாயும் இணைந்து பணியாற்றிய ஆல்பம் நேற்று ரிலீஸாகியுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இருவரும் ஒரே ரூமில் இருந்தது சிக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.