தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தகுதியான கணவரை தேடும் ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தீவிரமாக காதலிக்கின்றனர். அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடப்பதை முன்னிட்டு, சமீபத்தில் ஐதராபாத்திலுள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், தனது வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டி இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், ‘எனக்கு கணவராக வருபவர், முதலில் என்னை பற்றியும், பிறகு என் தொழிலை பற்றியும் என்னுடன் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் நபரையே நான் மிகவும் விரும்புவேன்.

உண்மையிலேயே ஒருவர் நல்லவர், எனக்காக போராடக்கூடிய நபர், நாளையே எனக்கு எதிராக ஏதாவது நடந்தால் அதை எதிர்த்து தைரியமாக போராடக்கூடிய ஒருவர் என்று யாரை நான் உணர்கிறேனோ, அவரே எனக்கு கணவராக இருக்க முழு தகுதி படைத்தவர்’ என்றார். அவரிடம், ‘இதுவரை நீங்கள் இணைந்து நடித்த நடிகர்களில் யாரை ‘டேட்’ செய்வீர்கள்? யாரை திருமணம் செய்துகொள்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு சிரித்தபடி பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, ‘விஜய் தேவரகொண்டாவை ‘டேட்’ செய்து, அவரையே திருமணம் செய்துகொள்வேன்’ என்றார். விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் என்ற தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா ெசான்ன கருத்து, அவர்களின் திருமண செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.