Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஐ ஆம் கேம் விமர்சனம்...

கோடீஸ்வரர் துல்கர் சல்மான் சூதாட்டத்துக்கு அடிமையாகி, அதிகமான பணம் சம்பாதிக்க முயற்சித்து கடனில் மூழ்குகிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆண்டனி வர்கீஸ், கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறார். அப்போது மிஷ்கினுடன் ஏற்பட்ட கடும் மோதலால் உயிரிழக்கும் ஆண்டனி வர்கீஸின் வலது கை, விபத்தில் சிக்கிய துல்கர் சல்மானுக்கு பொருத்தப்படுகிறது.

இதனால் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பிரச்னைகளை அவரால் தீர்க்க முடிந்ததா என்பது மீதி கதை. ஆபரேஷனில் பொருத்தப்பட்ட கை தனது கட்டுப்பாட்டை மீறி செயல்படும்போது துல்கர் சல்மான் சந்திக்கும் பிரச்னைகள் அதிரடி. ஒவ்வொரு காட்சி யிலும் தனது டிரேட் மார்க் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அவர் மிஷ்கினை பழிவாங்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது.

கயாடு லோஹர் வருகிறார், வசனம் பேசுகிறார். அவ்வளவுதான். அவரை தனது நடிப்பில் ஓரங்கட்டி

விடுகிறார், சம்யுக்தா விஸ்வநாதன். அவருக்கும், ஆண்டனி வர்கீஸுக்குமான காதல் அழுத்தமாக இருக்கிறது. கிரிக்கெட்டை உயிர்மூச்சாக நினைக்கும் ஆண்டனி வர்கீஸ், தடாலடி வில்லன் மிஷ்கின், துரோகம் செய்யும் கதிர், விநய் ஃபோர்ட் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.

ஹாலிவுட் பாணியை கையிலெடுத்த இயக்குனர் நஹாஸ் ஹிதாயத், ஃபேண்டசி படத்தை திடீரென்று பழிவாங்கும் கதையுடன் முடித்தது ஏமாற்றமாக இருக்கிறது. கிரிக்கெட் சூதாட்டம் குறித்து பல்வேறு படங்களில் பார்த்துவிட்டதால் சலிப்பு ஏற்படுகிறது. ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு, அஜயன் சாலிசேரியின் கலை இயக்கம், சாமன் சாக்கோவின் எடிட்டிங் குறிப்பிடத்தக்கவை. ஸ்டண்ட் காட்சிகள் அதிரடியாக இருக்கின்றன. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்தாலும், சில இடங்களில் பேரிரைச்சலாக இருக்கிறது. 173 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.