Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மே 30ம் தேதி சென்னையில் இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தனது சிம்பொனியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் அரங்கேற்றினார்.இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்​தார். தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழா அவரின் 50 ஆண்டு கால சினிமா பயணம் தொடர்பாகவும் எடுக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பம்சமாக அவர் லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசை, அதே ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவால் அரங்கேற்றப்பட்டது.

மேலும் இதை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் என்ற ஆசையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இளையராஜா தெரிவித்திருந்தார். அதற்கும் முதல்வரும் சம்மதம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிம்பொனி இசை அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் அந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது அதன்படி சென்னையில் வரும் மே 30ம் தேதி சிம்பொனி இசை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இடம், முன்பதிவு ஆரம்பம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக இளையராஜாவின் முதல் சிம்பொனி அரங்கேறவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.