Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இம்மார்ட்டல் விமர்சனம்...

தனது மாமா மாறன் நடத்தும் பிரிண்டிங் பிரஸ்சில் ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார். அப்போது வாடகைக்கு ரூம் தேடும் அவருக்கு ஒரு அபார்ட்மெண்ட்டில் ரூம் ஷேர் செய்துகொள்ள கயாடு லோஹர் போனில் அழைப்பு விடுக்கிறார். பிறகு கயாடு லோஹருடன் குடியேறும் ஜி.வி.பிரகாஷ் குமார், நாளடைவில் தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை கண்டு அலறுகிறார். அதன் பிறகு நடப்பதே மீதி கதை.

படம் முழுக்க கயாடு லோஹருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு ேலாஹர் ரத்தக்காட்டேரி என்பதை அறிந்து அதிர்ந்து, அவரை எதிர்கொள்ளும் காட்சிகளில் அசத்தியுள்ளார். ரசிகர்களை தனது அழகு மற்றும் நடிப்பின் மூலம் கயாடு லோஹர் தன்வசப்படுத்துகிறார். மாறன், ஆதித்யா கதிர், டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், அர்ஷு மகாராஜன், பெமா சாம்சோ, சுனிதா ஷ்ரேஸ்தா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிர வைக்கிறது. அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. விஎஃப்எக்ஸ் காட்சிகள் நேர்த்தியாக இருக்கின்றன. எடிட்டர் ராஜேஷ்.எம், கலை இயக்குனர் சிவசங்கர், ஸ்டண்ட் இயக்குனர்கள் ஆர்.சக்தி சரவணன், ஜி.என்.முருகன் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கது. மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ளார். ஹாலிவுட் தரத்துக்கு நிகராக தமிழ்ப் படத்தை கொடுக்க முடியும் என்று நிரூபிக்க முயற்சித்துள்ளார். முதல் பாதியின் விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் மிஸ் செய்துவிட்டார்.