Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அந்த சம்பவத்தால் அழுதுவிட்டேன்: மாளவிகா மோகனன் பகீர்

சென்னை: ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் `நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள்?’ என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதில் சொன்ன மாளவிகா, ‘‘அது, கடந்த மாதம் நான் வேலை விஷயமாக சென்னையில் இருந்தேன். நான் அங்கு நீண்ட காலம் தங்கியிருந்தேன்.

என் குழுவினர் அன்பானவர்களாக இருந்தாலும், வீடு, குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களை விட்டு மிக நீண்ட காலம் பிரிந்திருப்பது மிகுந்த தனிமையை ஏற்படுத்தத் தொடங்கிவிடும் என்று நான் நினைக்கிறேன். நாள் முடிவில் ஓட்டல் அறைக்குத் திரும்பி வரும்போது, பேசுவதற்கு யாரும் இல்லாமல் இருப்பது ஒரு கட்டத்தில் அது என்னை பாதிக்கத் தொடங்கியது. அது நாடகத்தனமாக அழுவது போல இல்லை. ஆனால் நான் மிகப் பெரிய மனச்சோர்வு அடைந்தது போல் உணர்ந்தேன். அப்போது எனது அறையில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டேன்’’ என்றார்.