Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இந்தியாவில் இரண்டு நாள் தாமதமாக ரிலீசாகும் ராமாயணா

மும்பை: நமித் மல்ஹோத்ராவின் பிரமாண்ட தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகி வரும் பான் வேர்ல்ட் படம் ‘ராமாயணா’. இதன் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6ம் தேதியும் 2ம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளி தினத்திலும் வெளியாகிறது. இப்படத்தில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணன் ரோலில் யஷ் நடிக்கின்றனர்.

இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 2 பாகங்களையும் சேர்த்து ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் உலகம் முழுவதும் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் டிரைலரில் ‘ராமாயணா’ படம் வரும் நவம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று குறி்ப்பிடபட்டாலும், இந்தியாவில் இப்படம் 2 நாள் தாமதமாக, நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியானது.

இதுகுறித்து தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறுகையில், ‘இந்தியாவில் நவம்பர் 8ம் தேதி தீபாவளி என்பதால் ‘ராமாயணா’ படத்தை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம். ஆனால் உலக ரசிகர்கள் 2 நாள் முன்னதாக (நவம்பர் 6) படத்தை பார்ப்பார்கள்’ என்றார்.