மும்பை: ‘ராமாயணா’ என்ற படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் கூறியதாவது: இதில் சூர்ப்பனகையாக நடிப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, இந்த படம் இந்த உலகிற்கு இந்தியாவை முக்கியத்துவப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி என்பது. நமது வரலாறு மற்றும் உண்மைகளை, திரைப்படத்தின் மூலமாக உலகிற்கு எடுத்து செல்வது மிகவும் முக்கியமானது.
இரண்டாவது, சூர்ப்பனகை கேரக்டர் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட, அதேவேளையில் பல்வேறு பரிமாணங்களை கொண்டது. உண்மையில், இந்த யுத்தம் நடப்பதற்கு அவர்தான் ஒரு காரணமாக இருந்தார். இத்தனை நுணுக்கமான குணங்களை கொண்ட ரோலில் நடிப்பது சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு நடிகையாக, ரசிகர்களின் பார்வைகளை மாற்றும் சவால்நிறைந்த கேரக்டர்களில் நடிப்பது ஒன்றே எனக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது.
