பாலி: பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா, பிரபல இயக்குனரான ரெமோ டிசோசா இயக்கத்தில் நடிகர் டைகர் ஷெராப் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். படப்பிடிப்பு தொடர்பான வேலைகளுக்காக இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் பருச்சா, அங்கு எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் சிக்கிய அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக பாலி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நுஷ்ரத் பருச்சா தற்போது பாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வர கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலத்தை அவர் நீட்டித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளன. இந்த விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படாத நிலையில், அவர் விரைவாக பூரண குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
