சென்னை: மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கத்திலிருந்தே தனது புதுமையான விளம்பர முயற்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வித்தியாசமான புரமோஷன், அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தில் ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், ஜீவா, வாழை ஜானகி, அமுதவாணன், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு, திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா மற்றும் பாலா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தைச் சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.
