Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இன்ஸ்டா பிரபலங்கள் இணையும் லவ் 3.ஓ

சென்னை: ‘லவ் 3. ஓ’ (Love 3.O) திரைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அக்கா என்று பிரபலமான ஆர்னிகா எழுதி, இயக்கியதுடன் கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே.என். ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்து, நடித்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். வி. உதயகுமார் ,பொருளாளர் இயக்குநர் பேரரசு, நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்னிகா பேசும் போது, ‘‘ஏஐ - ஐ வைத்து நாங்கள் ஒரு கதையை உருவாக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஏஐ பெண்ணை இந்தப் படத்தின் கதாநாயகன் காதலிக்கிறான். அவர்களது காதல் எப்படி இருக்கிறது? அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானா? பிரிந்து விடுகிறார்களா என்பது தான் கதை’’ என்றார்.