Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சர்வதேச பட விழாக்களில் வேம்பு

சென்னை: மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி நடித்துள்ளனர். பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதுடன்.

பெண்ணே துணிச்சலாக தன்னை பாதுகாத்து கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தையும் இந்தப்படம் சொல்கிறது. இந்தப்படத்தின் இறுதிப் பணிகள் நிறைவடைந்து தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் விரைவில் நடைபெற உள்ள அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தப்படம் தேர்வாகி உள்ளது. இயக்குனர் ஜஸ்டின் பிரபு கூறும்போது, ‘ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தும் விதமாக சமூக பொறுப்புடன் கூடிய ஒரு சரியான படமாக தான் இதை உருவாக்கி இருக்கிறோம்’ என்றார்.