Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஈரான் - இஸ்ரேல் போர்: மம்மூட்டி உருக்கம்

சென்னை: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குவதால், வளைகுடாக நாடுகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரினால் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் அது குறித்து மலையாள நடிகர் மம்மூட்டி கூறியதாவது: திரைப்படங்களுக்குள்ளும் விவாதங்கள், தர்க்கங்கள், ஏன் போர்கூட நடந்திருக்கின்றன. சில நேரங்களில் ஒரு தரப்பு ஜெயிக்கும், சில நேரங்களில் இரண்டு தரப்புமே தோற்றுப்போகும். இப்போதும் வெளியே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அதில் யார் ஜெயிப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால், இறுதியாக மனிதாபிமானம் மட்டுமே ஜெயிக்கும் என்று நான் நம்புகிறேன். அதுதான் ஜெயிக்க வேண்டும். இவ்வாறு மம்மூட்டி கூறியுள்ளார்.