Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஐயிட்டம் சாங்-னு சொல்லாதீங்க: தமன்னா ஆவேசம்

மும்பை: மும்பையில் தமன்னா அளித்த பேட்டி: தென்​னிந்​திய சினி​மா​வில் பெண்​களைப் பார்க்​கும் பார்​வை​யில் ஆணா​திக்க மனப் ​பான்மை இருப்​பதை உணர்ந்​தேன். அந்​தப் பார்வை பெண்​களைப் பாராட்​டும் வகையில் இல்​லை. அங்கு வணிக ரீதி​யாக வெற்றி பெற வேண்டுமென்​றால் குறிப்​பிட்ட ‘ஸ்​டார்’ அந்​தஸ்து அவசி​யம். அந்த வகை​யில் அங்கு பாலிவுட்​டை ​விட அதி​க​மான கட்​டுப்​பாடு​கள் இருக்​கின்​றன.

கவர்ச்​சி​யை​யும், நடிப்​புத் திறனை​யும் சமநிலைப் படுத்​தும் நடிகைகளே அங்கு நீண்ட காலம் வெற்​றிகர​மாக நிலைத்​திருக்க முடி​யும். இந்தி திரைத்​துறை​யில் 2 வகை​யான நடிகைகள் உள்ளனர். கலைநயமிக்க அணுகு ​முறையைக் கொண்​ட​வர்​கள். இதில் இருந்து மாறுபட்டவர்கள் மற்றொரு வகையினர்.

திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை ஐட்டம் சாங் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல. ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஐட்டம் என்று அழைப்பது அப்பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல, இந்த அணுகுமுறையில் மாற்றம் வரவேண்டும்.