Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உலகத்த நெனச்சேன் சிரிச்சேன்: பூஜா ஹெக்டே புஸ்ஸ்ஸ்...

சென்னை: துல்கர் சல்மான் ஜோடியாக ‘ஸ்ரீஸ்ரீ’ படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றி வரும் தகவல்கள் குறித்து பூஜா ஹெக்டே பேசியிருக்கிறார். அவர் கூறியது: சில நேரங்களில் அந்த வதந்திகள் கோபத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இறுதியில் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எனக்கே தெரியாத சில விஷயங்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிகிறது? என்றுதான் யோசிக்கத்தோன்றுகிறது.சில சமயத்தில் நம்மைப்பற்றி வெளியாகும் தகவல்களை பார்க்கும்போது, இது எங்கிருந்து வந்தது என்றே புரியாது.

அதேபோன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்வதுதான் நல்லது. அந்த அளவுக்கு நான் நொந்து போயிருக்கிறேன். இதுபோன்ற விஷயங்களை நான் பார்க்காவிட்டாலும் யாராவது அதைப் பற்றி என்னிடம் சொல்லிவிடுகிறார்கள் என்று சோஷியல் மீடியா வதந்திகள் குறித்து பேசியுள்ளார். தொடர் தோல்விகளால் பூஜா ஹெக்டேக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை, அவர் திருமணம் செய்யப்போகிறார், அவர் ஒருவரை காதலிக்கிறார் உள்ளிட்ட தகவல்கள் பரவுவது பற்றித்தான் பூஜா பேசியிருக்கிறார்.