Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜெய்யுடன் மீனாட்சி திடீர் நெருக்கம்

பி.வி புரொடக்‌ஷன் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய் நடிப்பில் இன்றைய சமகால பிரச்னைகள் குறித்து அழுத்தமாக பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் படம், ‘சட்டென்று மாறுது வானிலை’. வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். படம் குறித்து மீனாட்சி cகூறுகையில், ‘பாபு விஜய்க்கு சிறப்பு நன்றி.

இப்படம் உருவாகும் பயணத்தில் ஏராளமான தடைகள் இருந்தன. அதையெல்லாம் தாண்டி இப்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவுக்கு நன்றி. ‘வீரபாண்டியபுரம்’ படத்துக்கு பிறகு மீண்டும் ஜெய்யுடன் இணைந்து நடித்துள்ளேன். அவருடன் பணியாற்றுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு நன்றி. எங்களை அவர் திரையில் மிகவும் அழகாக காட்டியுள்ளார்’ என்றார். ஒரு பாடல் காட்சியில் அவரும், ஜெய்யும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். இது ரசிகர்களை பரவசப்படுத்தும் என்றும், தீவிர விஜய் ரசிகராக ஜெய் நடிக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.