சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும்: ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோ ரிலீஸ்
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் புரமோ நேற்று வெளியானது. இந்த வீடியோவில் நெல்சன் திலீப்குமார், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் பெஞ்சல் புயல் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த அறைக்குள் நடக்கும் துப்பாக்கிச்சூடுக்கு பிறகு புயல் வேகத்தில் நுழைகிறார் ரஜினிகாந்த். பிறகு அவர்களை (அனிருத், நெல்சன்) பார்த்து சைகையில் வில்லன் கூட்டம் எங்கே என கேட்கிறார். அவர்களும் சைகை செய்கிறார்கள். அங்கு செல்கிறார். பிறகு ரஜினிகாந்த் வீசிவிட்டு செல்லும் கையெறி குண்டு வெடிப்பு காரணமாக அந்த இடமே புகைமண்டலமாக மாறுகிறது.
பிறகு சுவரை உடைத்துக்கொண்டு துப்பாக்கி ஏந்தியபடி வரும் சிலரை, ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் எச்சரித்து துப்பாக்கியால் டீல் செய்து வழியனுப்பும் வகையில், புரமோ வீடியோவில் அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘ஜெயிலர் 1’ படத்தை போலவே 2ம் பாகத்திலும் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்து, சோஷியல் மீடியாவில் புரமோ வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
