Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூட்டை மாற்றிய ஜான்வி கபூர்

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடித்த ‘பெத்தி’ என்ற படம் தோல்வி அடைந்த பிறகு விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்தும், ஊடகங்களின் கவனத்தில் இருந்தும் ஜான்வி கபூர் விலகியிருந்தார். படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம், குறிப்பாக, கவர்ச்சியாக காட்டப்பட்ட விதம் குறித்து அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியானது. அதனால்தான் அவர் இப்படத்தின் விளம்பர பணிகளில் அதிகமாக கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பாலிவுட் ஏரியாவிலும் ஜான்வி கபூர் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. தனது திரையுலக பயணத்தின் அடுத்த கட்டத்தை கவனமாக திட்டமிட்டு வரும் அவர், வழக்கமான கவர்ச்சி மற்றும் வணிக ரீதியான கதாபாத்திரங்களை தாண்டி யோசித்து வருகிறார். தனது நடிப்பை வெளிப்படுத்தும் வகையில், வலுவான கதைக்களம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். இதனால், தன்னை தேடி வந்த சில கிளாமர் ஹீரோயின் கதைகளை தவிர்த்துவிட்டு, அழுத்தமான நடிப்பை பதிவு செய்யக்கூடிய கதைகளுக்காக காத்திருக்கிறார்.