Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஒரே படத்தில் இணையும் ஜான்வி கபூர், ஸ்ரீலீலா

ஸ்ரீலீலா, ஜான்வி கபூர் இருவரும் இந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளாக வலம் வருகிறார்கள். இவர்கள் இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகின்றனர். ஸ்ரீலீலா தற்போது தனுஷுடன் ‘ஓம்’ என்ற படத்திலும் இந்தியில் அனுராக் பாசு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் தற்போது ராஜ் மேத்தா இயக்கத்தில் ‘லக் ஜா கலே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உமேஷ் பிஸ்ட் என்பவர் இயக்கும் ஒரு ரொமாண்டிக், திரில்லர் படத்தில் ஜான்வி கபூர், ஸ்ரீலீலா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஏக்தா கபூர் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். பெண்களை மையமாக கொண்ட இப்படம், ஒரே ஆண்மீது காதல் கொள்ளும் 2 பெண்களை பற்றிய கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த 2 பெண்களின் ரோலில் ஜான்வி கபூர், ஸ்ரீலீலா நடிக்கவுள்ளனர். படத்தின் ஹீரோவாக யார் நடிக்கிறார், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற தகவல் விரைவில் வெளியாகிறது. 2 இளம் நடிகைகளின் இந்த சுவாரஸ்ய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.