Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜெயம் எஸ்.கே.கோபியின் காப்புரிமை இல்லாத முருகர் பாடல்

சென்னை: முருக பக்தர்கள் காப்புரிமையின்றி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பாடல், ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’. இதை புண்ணியம் பவுண்டேஷன் தயாரித்துள்ளது. திவோ மியூசிக் வெளியிடுகிறது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜெயம் எஸ்.கே.கோபி உருவாக்கியுள்ளார். அரசியலில் இருந்து விலகி விட்ட அவர், ‘முருகனருட்செல்வர்’ என்ற சிறப்புடன் முருகன் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதன் விளைவாக, முருகர் ஆராய்ச்சி பாடலை உருவாக்கியுள்ளார். வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். தமிழில் அவர் பாடிய முதல் பக்தி பாடல் இது. மறைந்த பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமான பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசை அமைத்துள்ளார்.

இதுகுறித்து ஜெயம் எஸ்.கே.கோபி கூறுகையில், ‘முருகன் எனக்கு ஆணையிட்டதன் மூலம் இப்பாடல் உருவாகியுள்ளது. ஒரு முருக பக்தைக்கும், முருகனுக்கும் நிகழும் உரையாடல் போல் பாடல் அமைந்துள்ளது. உலகிலுள்ள அனைவரும் காப்புரிமை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் 25ம் தேதி மாலை 7 மணிக்கு இப்பாடல் வெளியாகிறது’ என்றார்.