Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜெயப்பிரதாவை பிரமிக்க வைத்த பிரபாஸ்

தற்போது ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘ஃபெளஸி’, நாக் அஸ்வின் டைரக்‌ஷனில் ‘கல்கி 2898 ஏடி’ 2ம் பாகம், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ ஆகிய பான் இந்தியா படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார். துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான ‘சீதா ராமம்’ என்ற ஹிட் படத்துக்கு பிறகு ஹனு ராகவபுடி இயக்கும் படம், ‘ஃபெளஸி’. இதில் பிரபாஸ் ஜோடியாக இமான்வி இஸ்மாயில், தாய் வேடத்தில் ஜெயப்பிரதா நடிக்கின்றனர். கடந்த 52 வருடங்களாக நடித்து வரும் ஜெயப்பிரதா, தீவிர அரசியலில் ஈடுபட்டதால் நடிப்பை விட்டு விலகியிருந்தார். ஆனால், நல்ல கேரக்டர் தேடி வரும்போது மட்டுமே நடிக்கிறார்.

அந்தவகையில் ‘ஃபெளஸி’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் மிதுன் சக்ரவர்த்தி நடிக்கிறார். முன்னதாக ஓடிடியில் நேரடியாக வெளியான ‘ரிவாஸ்’ என்ற படத்தில் ஜெயப்பிரதா, மிதுன் சக்ரவர்த்தி நடித்திருந்தனர். ஜெயப்பிரதா கூறுகையில், ‘இதில் பிரபாஸுடன் இணைந்து நடிப்பதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும், பணியாற்றும் ஸ்டைலையும் பார்த்து பிரமித்தேன்’ என்றார்.