சென்னை: ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். கேஆர்ஜி கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. இதே படத்தின் தலைப்பில் கமல்ஹாசன் நடித்த படத்தை பாரதிராஜா இயக்கினார். அந்த படத்துக்கு கதை, திரைக்கதையை பாக்யராஜ் எழுதியது குறிப்பிடத்தக்கது.
