Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘மண்டாடி’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், பாலசரவணன் உள்பட பலர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மையமாக வைத்து உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன்மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்து முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார் சூரி. சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் ‘மண்டாடி’ படத்தை பார்த்துவிட்டு சூரியை போனில் அழைத்து பாராட்டினார். இதனை சூரி அவரது சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்நிலையில், கமல்ஹாசன் ‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். சூரி, இயக்குனர் மதிமாறன், சுஹாஸ் உள்ளிட்ட படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இது தொடர்பாக சூரி வெளியிட்ட பதிவில், ‘கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும், புதிய வெளிச்சமும். ‘மண்டாடி’ குறித்து அவர் பகிர்ந்த பார்வை, வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.