Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தங்கச் செயினை திருப்பி ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டிய கங்கனா

மும்பை: கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆட்டோ டிரைவர் கிரீஷ் என்பவரின் ஆட்ேடாவில் சித்ரா என்ற பெண் பயணம் செய்தார். குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் இறங்கிவிட்டார். வழக்கம் போல் கிரீஷூம் தனது ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் தனது ஆட்டோவில் கிடந்த தங்கச் செயிவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சித்ராவை தேடிப் பிடித்து, அவரிடம் தங்கச் செயினை ஒப்படைத்தார்.

இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் டேக் செய்துள்ள பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா, ‘எந்தவொரு சூழலிலும் வறுமையோ, பற்றாக்குறையோ உங்களை குற்றங்களைச் செய்யத் தூண்டாது. நீங்கள் (கிரீஷ்) நல்லதை செய்திருக்கிறீர்கள். அதற்கான கர்மா உங்களுக்கு கிடைத்தே தீரும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.