சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியும், பதிவிட்டும் பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை எதிர்கொண்டு வரும் கங்கனா ரனவத், தெலுங்கு முன்னணி நடிகர் ராணா டகுபதி தயாரிக்கும் ‘ஸ்கேரி பிக்சர்’ என்ற திகில் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதை ரவி பாபு இயக்குகிறார்.
டெல்லியில் நடந்த ‘ஹாரர்கான் 26’ விழாவில் பங்கேற்ற ராணா டகுபதி, இப்படம் குறித்து மேடையில் அறிவித்தார். அவர் கூறுகையில், ‘இது திகில் படம். எனது நண்பரும், இயக்குனருமான ரவி பாபு இயக்குகிறார். அவர் தெலுங்கில் சில திகில் படங்களை இயக்கியுள்ளார். இது அவரது முதல் இந்தி படம். இதன் தலைப்பு முதல்முறையாக இங்கு அறிவிக்கப்படுகிறது’ என்றார். இந்தியில் உருவாக்கப்படும் இப்படம் பிறகு தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. ‘பிளெஸ்டு பி தி ஈவில்’ என்ற ஹாலிவுட் திகில் படத்திலும் கங்கனா ரனவத் நடிக்கிறார்.
