Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

செப்டம்பர் 10ல் கார்த்தியின் ‘சர்தார் 2’

கார்த்தி, மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம், ‘சர்தார் 2’. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார், விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரித்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ‘சர்தார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள படத்தின் டீசர், பிரமாண்டம் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், கார்த்தியின் முற்றிலும் வித்தியாசமான தோற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது.

சாம் சி.எஸ் இசை அமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளிக்க, ராஜீவன் நம்பியார் அரங்கம் அமைத்துள்ளார். வேலுக்குட்டி எடிட்டிங் செய்ய, ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ளார். விரைவில் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகிறது. சாம் சி.எஸ் இசை அமைத்துள்ள 100வது படமான இது, தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. முக்கிய வேடங்களில் ராசி கன்னா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேது நடித்துள்ளனர்.