Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கார்த்தி, மீனாட்சி சவுத்ரி படம் துவங்கியது

சென்னை: கார்த்திக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி அவர் நடிக்கும் புதிய படத்தின் துவக்கி விழா, பூஜையுடன் நடைபெற்றது. இதில் கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கல்யாண் சங்கர் இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி தயாரிக்கிறார்.

இவர், தனுஷ் நடித்த வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர், சூர்யா நடித்து வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை தயாரித்துள்ளார். விரைவில் இந்த படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.