Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கார்த்திக் ஆர்யனை காதலிக்கிறேனா? ஸ்ரீலீலா பதில்

மும்பை: பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலிப்பதாக சொல்லப்படுவது குறித்து ஸ்ரீலீலா பதிலளித்துள்ளார்.

தனுஷ் ஜோடியாக ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக ‘ஆஷிக்கி 3’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கார்த்திக் ஆர்யனை அவர் காதலிப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. இது குறித்து அவர் கூறியது: 2 படங்களை தவிர புதிய படங்கள் எதுவும் கமிட் செய்யவில்லை. அதற்கு காரணம், மருத்துவ படிப்பை முடித்துவிட்டு, அதற்கான பணிகளில் பிசியாக ஈடுபட்டிருப்பதுதான்.

மேற்கொண்டு படிக்கவும் திட்டமிட்டுள்ளேன். அதற்காக சினிமாவை விட மாட்டேன். இப்படி மருத்துவம் ஒரு புறம், சினிமா ஒரு புறம் என்று பயணிப்பதால் காதலிக்க எல்லாம் என்னிடம் நேரமே இல்லை. திருமணத்தை பற்றி இன்னும் சில வருடங்களுக்கு யோசிக்க கூட முடியாது. அதனால் என்னைப் பற்றி வரும் தகவல்களை நம்பாதீர்கள். இப்போது எனது முழு கவனமும் படிப்பும் நடிப்பும்தான் என இருக்கிறது. இதிலேயே நான் சந்தோஷமாகவும் இருக்கிறேன்.இவ்வாறு ஸ்ரீலீலா கூறினார்.