Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் கொடிய செயல்: கஸ்தூரி ராஜா சர்ச்சை பேச்சு

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனுஷின் தந்தையும் இயக்குனரும் நடிகருமான கஸ்தூரி ராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது: இன்றைய பிள்ளைகள் படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். சமீபத்தில் செய்தியில் கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர் மரணத்திற்கு ஒரே காரணம், காதல் என்று சொல்லப்படும் கொடிய செயல் தான்.

படிக்கப்போனால் படி, வேலைக்கு போனால் வேலைக்கு போ. கல்யாணம் என்ற நிலை வரும்போது அப்பா அம்மாவிடம் விடு. உனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்பவர்கள். அவர்களின் வலியை இன்றைய பிள்ளைகள் உணர்வதில்லை. உங்களுக்கு ஒரு நல்ல கல்யாணம் செய்து வைக்க அந்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா? எனக்கு படிப்பு வருவதற்கு முன்பு காதல் வந்தது, எனவே படிப்பு தடம் புரண்டது.

டிகிரியை முடிக்காமல் போனதற்கு ஒரே காரணம் காதல் தான் என்றார். கஸ்தூரி ராஜாவின் இந்த பேச்சை பலரும் பாராட்டினாலும் சிலபேர் எதிர்க்கின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.