Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கவின் நடிக்கும் பேர் சொல்லும் பிள்ளை

சென்னை: கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்ற படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் நடந்தது. ‘தண்டட்டி’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராம் சங்கையா எழுதி இயக்குகிறார். கவின் ஜோடியாக ‘லப்பர் பந்து’ சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். ஜி.மதன் எடிட்டிங் செய்ய, எம்.கதிரவன் மதி அரங்கம் அமைக்கிறார்.

கிராம பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறார். ஏ.வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் தமிழ், தியாகராஜன் குமாரராஜா, ஆண்ட்ரூ லூயிஸ் கலந்துகொண்டனர். பிறகு கலைப்புலி எஸ்.தாணு, ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.