Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தன்னைத்தானே சந்தேகப்பட்ட கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடித்த ‘அக்கா’ என்ற வெப்தொடர், வரும் 30ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், ‘லட்சியமும், திறமையும் கொண்ட பெண்களை பார்க்கும்போது, சிலருக்கு ஏன் இந்த இன்செக்யூரிட்டி வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. எனது திரைப்பயணத்தில் அப்படிப்பட்ட சில இன்செக்யூர் ஆண் நடிகர்களுடன் பணியாற்றும் சூழ்நிலை அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது என்னால் இதை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. ‘நமக்குத்தான் ஏதோ பிரச்னையோ, நாம்தான் தவறாக நடந்து கொள்கிறோமோ?’ என்று என்னையே நான் சந்தேகப்பட தொடங்கினேன்.

ஆனால், படப்பிடிப்பு முடியும்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது. தவறு என்னிடம் இல்லை, அவர்களின் சொந்த இன்செக்யூரிட்டிதான் என்னை அவ்வாறு உணர வைத்து இருக்கிறது. லட்சியத்துடன் வாழும் பெண்களை ஒருகட்டத்துக்கு மேல் பார்த்தால் சிலருக்கு பயம் வந்துவிடுகிறது போல’ என்றார். அதற்கு பிறகு பேசிய ராதிகா ஆப்தே, ‘லட்சியம் கொண்ட பெண்களை கண்டு எல்லா ஆண்களும் பயப்படுவது இல்லை. எனினும், அப்படிப்பட்ட சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அதேவேளையில், பெண்களுக்கு தோளோடு தோள் கொடுத்து இணைந்து பணியாற்றும் எத்தனையோ சிறந்த ஆண்களையும் பார்த்திருக்கிறேன்.

அதுபோல், நமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கும் சில பெண்மணிகள் கூட, சில நேரங்களில் உதவாமல் இருப்பதை பார்த்திருக்கிறோம். மனிதர்கள் என்றால் அப்படி, இப்படி என்றிருப்பது வாடிக்கை. எனினும், தற்காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் பெண்களின் பங்களிப்பும், சமத்துவமும் முன்பைவிட அதிகமாகவே இருக்கிறது’ என்றார்.