Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அக்கா வெப் தொடரில் கேங்ஸ்டராக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

மும்பை: கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிக்கும் ‘அக்கா’ என்ற வெப்தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ், யஷ் ராஜ் பிலிம்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளன. தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ளார். வரும் 30ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. கடந்த 1980களின் பின்னணியில், பெண்களை மையமாக கொண்ட கேங்ஸ்டர் கதையில் பவானியாக கீர்த்தி சுரேஷ், ருத்ராவாக ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். கடந்த 1980களில் தென்னிந்தியாவில் இருக்கும் பெர்னூர் என்ற கற்பனை நகரத்தை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கீர்த்தி சுரேஷ், ‘தமிழில் ‘சாணிக் காயிதம்’ என்ற தனித்துவமான ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தேன். அதில் எனது கேரக்டரில் அதிக வன்முறை இருந்தது. ‘அக்கா’ தொடரில் பவானி ஒரு அமைதியான மற்றும் நிதானமான கேங்ஸ்டராக வருகிறேன். இதுபோன்ற தனித்துவமான கதையில் நான் நடித்ததில்லை. இது ஒரு புது உலகம். இத்தொடரில் நான் கேங்ஸ்டர்களாக தோன்றினாலும் எனக்கென்று ஒரு பாரம்பரியமும் அதற்கேற்ற உடையும், உடல்மொழியும் இருக்கும். அந்த பகுதியை ஆட்சி செய்யும் அரச குடும்பத்தை சேர்ந்த கேங்ஸ்டர் என்றே சொல்லலாம்’ என்றார்.