Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தேசிய விருதை தவிர்க்கும் கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடித்துள்ள படம் ‘டோரதி’. நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘மதுரை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த ‘ரஜினி முருகன்’ உள்பட சில படங்களின் படப்பிடிப்பு மதுரையில் நடந்தது. அந்த படங்களும் வெற்றி பெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், மதுரை சாப்பாடு தவிர அங்குள்ள ஜிகர்தண்டா எனக்கு மிகவும் பிடிக்கும். ‘டோரதி’ படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்தது.

நான் இளையராஜாவின் இசைக்கு பெரிய ரசிகை, அவர் இசையமைத்து அவர் பாடலுக்கு நாங்கள் ஆடியது பெருமைக்குரிய விஷயம். ரிஷிகாந்த், சனந்த் சிறப்பாக நடித்துள்ளனர். நான் இதில் ஒரு மலையாள பெண்ணாக தோன்றுகிறேன். மீண்டும் உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இந்த முறை ரிஷிகாந்த், சனந்த் இருவரும் தேசிய விருது பெறட்டும் என பதில் சொல்கிறேன். இப்படிப்பட்ட படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. இந்தியா மட்டுமல்ல உலகளவிலும் ‘டோரதி’ படம் பேசப்படும்.

ஒளிப்பதிவாளர் திருவும் எனக்கு இன்னொரு குரு. எனது ஆரம்பகால படங்களில் அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார், நிறைய அட்வைஸ் செய்வார். அப்பொழுது லட்டு உள்ளிட்ட நிறைய இனிப்புகள் சாப்பிட்டு குண்டாக இருப்பேன். அதை பார்த்துவிட்டு என்னை கண்டிப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.