Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி

சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில், சத்தியவான் சாவித்திரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். நீதிமன்றத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் டைட்டில் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், உமேஷ் குமார் பன்சால் தயாரித்துள்ளனர். ஒரு வழக்கில் சீனியர் வக்கீல் நியாயத்துக்கு எதிராக வாதிட, அதை உணர்த்த கீர்த்தி முற்படுகிறார். அப்போதுதான் அந்த சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்க்கையை மாற்றுவதுதான் கதை. படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.