Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கலீபாவில் நடிக்கும்போது பிரஷர்: கைரா வாசுதேவன் சொல்கிறார்

கொச்சி: மலையாள திரையுலகம் தொடர்ந்து புதுமுக நடிகர், நடிகைகளுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ‘கலீபா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளவர் கைரா வாசுதேவன். வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவான இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ள கைரா, அறிமுகப் படத்திலேயே முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“பெரிய நடிகர்களுடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்ற அழுத்தம் எனக்குள் இருந்தது” என்று கூறியுள்ள அவர், அந்த அழுத்தத்தை பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் வைசாக் இருவரும் போக்கியதாக தெரிவித்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் எதிர்பார்த்ததைவிட மிகவும் அன்பான சூழல் இருந்ததாக கைரா கூறுகிறார். குறிப்பாக, தன்னை ஒரு புதுமுகமாக மட்டும் பார்க்காமல், படக்குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டு பழகிய விதம் தனக்கு நம்பிக்கையை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிருத்விராஜ் மற்றும் வைசாக் இருவரும் தன்னுடன் அன்பாக பழகியதுடன், நடிப்பில் நம்பிக்கையும் அளித்ததாக கைரா கூறியுள்ளார். இதனால் ஆரம்பத்தில் இருந்த தயக்கமும் பயமும் படிப்படியாக குறைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ‘கலீபா’ படத்தின் மூலம் கவனத்தை பெற்றுள்ள கைரா வாசுதேவன் தற்போது புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது அடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது. ஒரு நடிகைக்கு முதல் படத்தின் வெற்றியை விட, அந்த வெற்றியை அடுத்தடுத்த படங்களில் எப்படி பயன்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம். அந்த வகையில், தனது ஆரம்ப கால வாய்ப்புகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டிய கட்டத்தில் இருப்பதா கைரா சொல்கிறார்.