Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கியாரா அத்வானியை ஆபாசமாக விமர்சித்த விவகாரம்; நடிகருக்கு ஒரு நீதி நடிகைக்கு ஒரு நீதியா? ஹுமா குரேஷி கோபம்

மும்பை: யஷ், பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தபாஹி’ என்ற பாடல் வீடியோ ‘டாக்ஸிக்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், பாடலில் கியாரா அத்வானியின் ஆடை அலங்காரம் மற்றும் நடன அசைவுகளை குறிப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர், அவருக்கு எதிராக பாலின அடிப்படையிலான அருவெறுப்பான கருத்துகளையும், ஆபாச விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

திரைத்துறையில் நடிகைகளை மட்டும் இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த அத்துமீறல் விவகாரம், பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கியாரா அத்வானிக்கு எதிராக நடக்கும் ஆபாச தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்த ஹுமா குரேஷி, நெட்டிசன்களின் செயலை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நடிகைகள் தங்களின் தொழில் சார்ந்த தேர்வுகளுக்காக இதுபோல் இலக்கு வைக்கப்படுவது மிகவும் மோசமான நோய் மற்றும் அருவெறுப்பான செயலாகும். நடிகர்களுக்கு ஒரு நீதி, நடிகைகளுக்கு ஒரு நீதியா? ஆடை மற்றும் நடிப்புக்காக, பெண்களை மட்டுமே ஏன் தொடர்ந்து ஒழுக்க ரீதியாக கேள்வி கேட்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.