Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முதல் முத்தம்; சனம் ஷெட்டி ஓபன் டாக்

சென்னை: தனது வாழ்க்கையின் சில ரகசியங்களை மனம் விட்டு பேசியிருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. ‘‘நான் முதன்முதலாக பார்த்த அடல்ட் படம் அமெரிக்கன் பை. அப்போது அதை பற்றி பெரிய பேச்சா இருந்தது. நான் கல்லூரி படிக்கும்போது ரொம்ப மக்கு. அமெரிக்கன் பை-னா ஏதோ ஸ்வீட் அல்லது சாப்பாடு பத்தின படம் என்று நினைத்தேன்.

அதன்பின் தோழிகளோடு சேர்ந்து சிடியில் போட்டு ஒரு பிரெண்ட் வீட்டில் பார்த்தோம். அதை இப்போது நினைத்தாலே ரொம்பவும் சில்லியா இருக்கு. ஆனால் அது க்யூட்டான மெமரியா இருக்கு’’ என்று கூறினார். மேலும் ஆண்களை எப்படி செக்-அவுட் செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ‘‘இப்போதெல்லாம் நான் யாரையும் அப்படி பார்ப்பதில்லை.

ஆனால் பார்த்தால் கண்டிப்பாக அவங்களோட சிரிப்பை வச்சுத்தான் தேர்வு செய்வேன். ஏன்னா, சிரிப்புலதான் உண்மை இருக்கா, போலித்தனம் இருக்கான்னு தெரிஞ்சிடும்’’. தன்னுடைய முதல் முத்தம் குறித்த கேள்விக்கு, ‘‘எனக்கு 21 வயசு இருக்கும்போது அந்த சம்பவம் நடந்துச்சு’’ என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் சனம் ஷெட்டி.