Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிட்டி விமர்சனம்

ஆட்டோ ஓட்டுநரான விஜய் (அசோக்), இரண்டு கொலைகளைத் தான் செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைகிறார். அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. ஆனால் விசாரணை தீவிரமாகும்போது, விஜய் சொல்வதில் எது உண்மை, எது அவரது மனதில் உருவானது என்ற சந்தேகம் எழுகிறது. பிறகு பரபரப்புடன் நகர்கிறது படம்.

விஜய் கதாபாத்திரத்தில் அசோக் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், கோபம், குழப்பம் என மாறுபட்ட உணர்வுகளை தேவையான அளவில் வெளிப்படுத்துகிறார். போலீஸ் அதிகாரியான யுகன், சுறுசுறுப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சங்கவி, நிஷா, சிமு அத்வானி உள்ளிட்டோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

நீதிபதியாக ஒய்.ஜி. மகேந்திரனின் அனுபவமான நடிப்பும் கவனம் பெறுகிறது. காதர் இசையும், வி.எஸ். வேலனின் ஒளிப்பதிவும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளன. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருந்தால் சஸ்பென்ஸின் தாக்கம் அதிகரித்திருக்கும்வழக்கமான கொலை விசாரணைக் கதையிலிருந்து மாறுபட்டு, உளவியல் பின்னணியில் சஸ்பென்ஸ் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நெடுமாறன்

மோகன்தாஸ்.