Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தெரிஞ்சா காதலிங்க விமர்சனம்...

கிரண், டி.விபின், ஏ.சாதுல்பிரான் ஆகியோர், ஒரே அறையில் தங்கி ஜாலியாக வாழ்ந்து வரும் நண்பர்கள். மலையில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போாராடும் கிரணுக்கு ஹீரோயின் அஜயன்யா உதவுகிறார். நாளடைவில் கிரண், அஜன்யா நட்புடன் பழகுகின்றனர். அப்போது சொத்து தகராறில் அஜன்யாவின் ஒரே சொந்தமான தாத்தா கொல்லப்படுகிறார். தவிக்கும் அஜன்யாவை தனது நண்பர்கள் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்து வருகிறார், கிரண். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

அனைவரும் புதுமுகங்கள் என்பதால், இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர். கிரண், டி.விபின், ஏ.சாதுல்பிரான், அஜன்யா.ஆர், ஆதிரா.கே, தீபா ஆண்டனி, மீசை வெள்ளைப்பாண்டி, மைக்கேல் ராஜ், பி.ஆர்.கண்ணன் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். கோல்டு சந்துருவின் கேமரா, இயற்கை அழகை அள்ளிக்கொண்டு வந்துள்ளது.

புதியவர்களின் முகங்களுக்கு அதிமாக குளோசப் வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். சி.எம்.மகேந்திரா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் பலம் சேர்த்திருக்கிறார். காதல் என்பது உணர்வுப்பூர்வமானது. அதை வற்புறுத்தி வரவழைக்க முடியாது என்று எழுதி இயக்கி தயாரித்துள்ள எம்.கஜேந்திரன், எளிமையாக சொன்னதை திரையில் இன்னும் வலிமையாக சொல்லியிருக்க வேண்டும்.