Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கற்பனை சம்பவங்களால் உருவான ‘கோகினூர்’

வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர் வைரத்தின் வரலாற்று பதிவுகளை வைத்து கற்பனையாக எழுதப்பட்ட கதை, ‘கோகினூர்’. எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் ஆர்.இ.கஜேந்திரா கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார். ‘அலையோடு விளையாடு’ என்ற படத்தை தயாரித்த பகவான் பாவேந்தர், ‘கோகினூர்’ படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஜீவா, நவீன், ஹிமா, தனு பிரசாத், பாவனா, ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி, தீரன் தியாகராஜன், ரவி நடித்துள்ளனர்.

ராஜா சிவசங்கர் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.திவாகர் இசை அமைத்துள்ளார். பகவான் பாவேந்தர், டி.எஸ்.திவாகர் பாடல்கள் எழுதியுள்ளனர். கிஷோர் நடனப் பயிற்சி அளிக்க, சுப்ரீம் சுப்பு சண்டைக் காட்சி அமைத்துள்ளார். ஜி.பிரியதர்ஷன் இணை தயாரிப்பு செய்துள்ளார். திரைக்கதை எழுதி பகவான் பாவேந்தர் இயக்க, 5 பாடல்கள் மற்றும் 3 சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மைசூருவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.