தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆயுத பூஜைக்கு வேட்டையன், கங்குவா ரிலீஸ்

சென்னை: தமிழில் வெளியான ‘ரத்த சரித்திரம்’, ‘பயணம்’, ‘தோனி’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர், த.செ.ஞானவேல். பிறகு சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ என்ற படத்தை எழுதி இயக்கினார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் அறிமுகமாகிறார்.

இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ என்ற 3டி படம், வரும் அக்டோபர் 10ம் தேதி 10 மொழிகளில் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் பாலிவுட் ஸ்டார்கள் திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ளனர். அக்டோபர் 11ம் தேதி ஆயுத பூஜை. அதை முன்னிட்டு இப்படங்கள் திரைக்கு வருகின்றன.