பல்வேறு மொழிகளில் திரைக்கு வரும் ‘ராமாயணா’ என்ற படத்தில், சீதை வேடத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் வலுவான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள அவர், ஓடிடி தளத்தை பொறுத்தவரையில் ரஷ்மிகா மந்தனாவை விட பின்தங்கி இருக்கிறார். சாய் பல்லவி நடிக்கும் படங்களை விட, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்களுக்கே அதிக தொகை கொடுக்க ஓடிடி தளங்கள் முன்வருகின்றன. பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்ததும், அவரது மிகப்பெரிய சோஷியல் மீடியா ரசிகர் பட்டாளமுமே ஓடிடி சந்தை மதிப்பு வித்தியாசத்துக்கு முக்கிய காரணமாகும். ‘புஷ்பா 2’, ‘அனிமல்’, ‘சாவா’ ஆகிய பான் இந்தியா வெற்றிப் படங்களில் ராஷ்மிகா மந்தனா இருக்கிறார்.
இது தென்னிந்தியாவை தாண்டி அவரது சந்தை எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றும் 5 கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர் பட்டாளமும், ஒரு படத்தின் வணிக ரீதியான மதிப்பை ஓடிடி தளங்கள் மதிப்பிடும்போது அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. சாய் பல்லவி சிறந்த நடிப்பாலும், கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பதாலும் தனக்கென்று ஒரு வலுவான இடத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்திய தகவல்படி, எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிரபல ஓடிடி தளம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உடனே வாங்கி விட்டது. இது ராஷ்மிகா மந்தனாவின் ஓடிடி சந்தை மதிப்புக்கு மற்றொரு உதாரணமாக சொல்லப்படுகிறது.
